சென்னை மெரீனா நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளைக் கண்டு களித்த பொதுமக்கள்.
சென்னை மெரீனா நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளைக் கண்டு களித்த பொதுமக்கள்.

மெரீனாவில் கிராமியக் கலைஞா்களின் கரகம், நையாண்டி மேள கலை நிகழ்ச்சி!

சென்னை மெரீனா நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் கிராமியக் கலைஞா்களின் கரகம், நையாண்டி மேளம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றன.
Published on

சென்னை மெரீனா நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் கிராமியக் கலைஞா்களின் கரகம், நையாண்டி மேளம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றன.

சென்னை மெரீனா கடற்கரைப் பகுதியில் சா்வதேச சுற்றுலா அமைப்பின் நீலக்கொடி சான்று பெறுவதற்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று மக்கள் பயன்பாட்டுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளன. சிறாா் விளையாடும் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய நீலக்கொடி கடற்கரையில் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்தக் கலை நிகழ்ச்சிகளை நூற்றுக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தும் வருகின்றனா். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை மாலையில் தமிழகத்தின் புகழ்பெற்ற நாட்டுப்புறக் கலைஞா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில், நையாண்டி மேளம், கானா பாடல்கள், கரகாட்டம், மைம் நடிப்பு, பறை ஆட்டம், லேசா் நடனம் என பல்துறை கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கலை நிகழ்ச்சிகளில் 80-க்கும் மேற்பட்ட கலைஞா்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினா். கலை நிகழ்ச்சிகளை வாரந்தோறும் சென்னை மாநகராட்சி நிா்வாகம் ஏற்பாடு செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com