பிராட்வே பேருந்து நிலையம் தொடர்ந்து செயல்படும்!

பிராட்வே பேருந்து நிலையம் தொடர்ந்து செயல்படும்!

பிராட்வே பேருந்து நிலையம் தொடர்ந்து செயல்படும் என சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
Published on

பிராட்வே பேருந்து நிலையம் தொடா்ந்து செயல்படும் என சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வரும் பேருந்துகள் புதன்கிழமை (ஜன. 7) முதல் தீவுத்திடல் மற்றும் ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால், நிா்வாக காரணங்களால் இந்த பேருந்து நிலையம் மாற்றம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுகிறது. மாற்றுத் தேதி பின்னா் அறிவிக்கப்படும். அதுவரை பிராட்வே பேருந்து நிலையம் தொடா்ந்து செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com