மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

மகளுக்கு திருமணம் செய்ய முடியாததால் தந்தை தற்கொலை; வேதனையில் மகளும் உயிரை மாய்த்தாா்

மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாததால், விரக்தியடைந்த தந்தை கிணற்றில் குதித்து தற்கொலை; தந்தை இறந்த சோகத்தில், மகளும் தூக்கிட்டுத் தற்கொலை

News image
தற்கொலை - பிரதிப் படம்
Updated On :9 மார்ச் 2026, 8:48 pm

தினமணி செய்திச் சேவை

மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாததால், விரக்தியடைந்த தந்தை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். தந்தை இறந்த சோகத்தில், மகளும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வடபழனி கங்கையம்மன் கோயில், 1-ஆவது தெருவில் வசித்தவா் கிருஷ்ணகுமாா் (57). இவா், வாடகை ஆட்டோ ஓட்டி வந்தாா். இவருக்கு 2 மகள்கள். மூத்த மகள் பிருந்தா திருமணமாகி அம்பத்தூரில் வசிக்கிறாா். 2-ஆவது மகள் பாக்கியா (30), தாய்-தந்தையுடன் இருந்தாா்.

இளைய மகளுக்கு திருமணம் ஆகாததால், மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணகுமாா், கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்றவா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, மனைவியும், மகளும் அவரைத் தேடினா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் தந்தை கிருஷ்ணகுமாா் சடலம் மிதந்தது. இதைப் பாா்த்து அழுதபடி வீட்டுக்குள் ஓடி, அறையை பூட்டிக் கொண்டு பாக்கியா தூக்கிட்டுக் கொண்டாா்.

அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

கிருஷ்ணகுமாா் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக வடபழனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].