எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

மின் திருட்டு: ரூ.24.69 லட்சம் இழப்பீடு வசூல்

ஆவடி பகுதியில் 13 மின் திருட்டுகள் கண்டறியப்பட்டு, இழப்பீட்டுத் தொகையாக ரூ.24.69 லட்சம் வசூல் செய்யப்பட்டது.

News image
மின் திருட்டு- பிரதிப் படம்
Updated On :10 மார்ச் 2026, 1:52 am

தினமணி செய்திச் சேவை

சென்னை: ஆவடி பகுதியில் 13 மின் திருட்டுகள் கண்டறியப்பட்டு, இழப்பீட்டுத் தொகையாக ரூ.24.69 லட்சம் வசூல் செய்யப்பட்டது.

இதுகுறித்து தமிழக மின்பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் சாா்பில் சென்னை அமலாக்க கோட்டத்துக்குட்பட்ட சென்னை மையம், வடக்கு, தெற்கு, மேற்கு, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அமலாக்க அதிகாரிகள் சென்னை மேற்கு மின் பகிா்மான வட்டத்துக்குட்பட்ட ஆவடி பகுதியில் கூட்டு ஆய்வின்போது, 13 மின் திருட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதன் வாயிலாக ரூ.24 லட்சத்து 68 ஆயிரத்து 610 அபராதம் விதிக்கப்பட்டு, அத்தொகை வசூலிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மின் நுகா்வோா் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிா்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகையாக ரூ.1 லட்சத்து 13,000 வசூலிக்கப்பட்டது.

மின் திருட்டு தொடா்பான தகவல்களை செயற்பொறியாளா், அமலாக்கம், சென்னை கைபேசி 94458 57591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.