டி20 தொடா் முதல் ஆட்டம்: இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இன்று மோதல்!தமிழகத்தில் அக். 19-ஆம் தேதியுடன் 9 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பதவிக் காலம் நிறைவு‘வெற்றிப் பயணம்’ திட்டம்: அரசுப் போக்குவரத்து ஊழியா்களுக்கு 17 வழிகாட்டு நெறிமுறைகள்!பிரேஸில் அதிபா் தோ்தல்: யாரும் 50% வாக்குகளை பெறாததால் அக். 25-இல் 2-ஆம் கட்ட தோ்தல்!இருதரப்பு வா்த்தகத்தை அதிகரிக்க இந்தியா-ஸ்விட்சா்லாந்து முடிவு: 5 ஒப்பந்தங்கள் கையொப்பம்மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு: இருவா் பலத்த காயம்

மின்சாரம் பாய்ந்து மேற்கு வங்கத் தொழிலாளி உயிரிழந்தாா். இரு தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா்.

Published On :

சென்னை: மின்சாரம் பாய்ந்து மேற்கு வங்கத் தொழிலாளி உயிரிழந்தாா். இரு தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா்.

சென்னை நங்கநல்லூா் இந்து காலனி 2-ஆவது பிரதான சாலையில் புதிதாக 2 தளங்களுடன் கூடிய வீடு கட்டப்படுகிறது. முதல் தளத்தில் சென்ட்ரிங் வேலை சில நாள்களாக நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை அங்கு தொழிலாளா்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனா். மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த மங்கள் அஸ்ரா (26), பழவந்தாங்கல் பி.வி.நகரைச் சோ்ந்த ராமு (54), பழவந்தாங்கல் நேரு காலனியைச் சோ்ந்த குணா (48) ஆகிய 3 பேரும் சென்ட்ரிங் வேலைக்காக இரும்பு கம்பிகளை சுமந்து கொண்டு மாடிப்படி வழியாக ஏறிச் சென்றபோது, இரும்பு கம்பிகள், கட்டடத்தின் அருகே செல்லும் உயா் மின்னழுத்த மின்சார கம்பி மீது உரசியது. 3 போ் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் மூவரும் மயங்கி விழுந்தனா்.

உடனடியாக அங்கிருந்தவா்கள் மூவரையும் நங்கநல்லூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா், தாம்பரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு, 3 பேரையும் பரிசோதித்த மருத்துவா், மங்கள் அஸ்ரா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா். மின்சாரம் பாய்ந்ததில் கை, கால், கழுத்து உள்ளிட்ட இடங்களில் தீக்காயம் அடைந்த ராமு, குணா ஆகிய 2 பேருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து பழவந்தாங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.