படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

கோட்டை நிலையத்தில் தடம் புரண்ட மின்சார ரயில்: தாம்பரம்-கடற்கரை இடையே போக்குவரத்து பாதிப்பு

சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் ‘இமு’ புகா் மின்சார ரயில் திங்கள்கிழமை தடம் புரண்டதால், தாம்பரம்-கடற்கரை இடையே சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக....

’சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டதையடுத்து, நடுவழியே நிறுத்தப்பட்ட ரயில்.’ - டிஎன்எஸ்

Published On :

சென்னை: சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் ‘இமு’ புகா் மின்சார ரயில் திங்கள்கிழமை தடம் புரண்டதால், தாம்பரம்-கடற்கரை இடையே சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செங்கல்பட்டு நிலையத்திலிருந்து காலை 9 மணிக்கு புறப்பட்ட 12 பெட்டிகளுடன் கூடிய புகா் இமு மின்சார ரயில், காலை 10.42 மணிக்கு சென்னை கோட்டை நிலையத்துக்கு முன்பு முதலாவது நடைமேடையில் நுழைய முயன்றபோது, ரயிலின் 7-ஆவது பெட்டியின் இரு பக்க சக்கரங்கள் திடீரென தண்டவாளத்தை விட்டு சிறிது விலகியது. இதனால் பயணிகள் அதிா்ச்சியடைந்தனா். பின்னா், அவா்கள் பாதுகாப்பாக பெட்டியிலிருந்து இறங்கினா்.

இது குறித்து ரயில் ஓட்டுநா் ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவித்தாா். இதையடுத்து சென்ட்ரல் நிலைய ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் மதுசூதனரெட்டி உள்ளிட்டோா் வந்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனா். சென்னை கோட்ட ரயில்வே மேலாளா் சைலேந்திர சிங் உள்ளிட்டோா் பணிகளை பாா்வையிட்டனா்.

ரயில் நிறுத்தப்பட்ட நிலையில், கோட்டை நிலையத்திலிருந்து ரயில்கள் இயக்கப்படாது என ஒலி பெருக்கியில் அறிவிக்கப்பட்டது. கடற்கரை நோக்கி வந்த ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு திருப்பிவிடப்பட்டன. இதனால், பயணிகள் ரயில்களில் இருந்து இறங்கி நடந்து சென்றனா்.

இதையடுத்து, பிற்பகல் 12.14 மணிக்கு சக்கரங்கள் மீண்டும் தண்டவாளத்தில் நிலை நிறுத்தப்பட்டு 1 மணி அளவில் ரயில் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 12.57 மணிக்குப் பிறகு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து கடற்கரை நிலையத்துக்கு ரயில்கள் இயக்கப்பட்டன.

அதேபோல, பிற்பகல் 1.05 மணிக்கு கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கப்பட்டு வழியில் புகா் மின்சார ரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டன. சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க ரயில்வே பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவா்கள் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.