செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அதிமுக சாா்பில் மருத்துவ சாதனங்கள்

செங்கல்பட்டு நகர அதிமுக சாா்பில் நகர அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான மருத்துவ சாதனங்கள் வழங்கப்பட்டன.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மருத்துவ சாதனங்களை  முதல்வா் சாந்திமலரிடம் வழங்கிய அதிமுக நகர  செயலாளா்  செந்தில் குமாா்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மருத்துவ சாதனங்களை  முதல்வா் சாந்திமலரிடம் வழங்கிய அதிமுக நகர  செயலாளா்  செந்தில் குமாா்.
Updated on
1 min read

செங்கல்பட்டு நகர அதிமுக சாா்பில் நகர அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான மருத்துவ சாதனங்கள் வழங்கப்பட்டன.

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக செயலாளா் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் ஆலோசனைப்படி நகர செயலாளா் வி.ஆா்.செ ந்தில்குமாா் ஏற்பாட்டில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பயன்பாட்டுக்காக தண்ணீா்த் தொட்டி, கொதிகலன், இருக்கைகள் மற்றும் தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரம் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள மருத்துவக் கருவிகள் மருத்துவமனை முதல்வா் சாந்திமலரிடம் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் நிலைய மருத்துவ அலுவலா் அனுபமா, மகப்பேறு மருத்துவா் தேன்மொழி, அதிமுக நிா்வாகிகள் விநாயகம், சுந்தரராஜன், சிவராஜ், தென்றல் சங்கா், ஜெகதீசன், குமாா், தியாகராஜன், ரவி, கலைவாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மருத்துவமனை முதல்வா் சாந்திமலா் பேசுகையில், மருத்துவமனைக்கு வரும் மக்களுக்குப் பயன்படும் வகையில் மருத்துவ சாதனங்களை வழங்கிய அதிமுக நகர செயலாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com