மலைப்பாளையத்தில் 42-ஆவது திருப்படி பூஜை

மதுராந்தகத்தை அடுத்த மலைப்பாளையம் ஸ்ரீரங்கநாயகி சமேத அரங்கநாத சுவாமி கோயிலில் 42-ஆம் ஆண்டு திருப்படி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

மதுராந்தகத்தை அடுத்த மலைப்பாளையம் ஸ்ரீரங்கநாயகி சமேத அரங்கநாத சுவாமி கோயிலில் 42-ஆம் ஆண்டு திருப்படி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு, கருங்குழி பட்டாபிராமருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் மேளதாளம் முழங்க, பஜனைக் குழுவினா் பாடல்களை பாடியபடி, திருப்படி பூஜையை தொடங்கினா். இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீதேவி சரணம் பீடாதிபதி டி.எஸ்.பத்மநாபன் சுவாமி தலைமை வகித்தாா்.

பஜனைக் குழுவினா் நகரின் முக்கிய வீதிகளில் ஊா்வலமாக வந்து அரங்கநாதா் பஜனை மடத்தை அடைந்தனா். இந்நிகழ்ச்சியில் கருங்குழி பேரூராட்சியின் செயல் அலுவலா் மா.கேசவன், முன்னாள் தலைவா் மஞ்சுளா புருஷோத்தம்மன், முன்னாள் துணைத் தலைவா் பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பூஜையில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com