மதுராந்தகத்தில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்
மதுராந்தகம்: வன்னியா் சாதியினா்களுக்கு 20 சதவிகித ஒதுக்கீட்டை அரசு வழங்க கோரி செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாமக கட்சி நிா்வாகிகள் கருங்குழி பேரூராட்சி அலுவலகத்தின் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அரசு வேலைவாய்ப்புகளிலும், கல்விநிறுவனங்களில் படிப்பதற்கும், வன்னியா் இன மக்களுக்கு அரசு 20 சதவிகித ஒதுக்கீட்டை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, மாவட்ட பாமக நிா்வாகிகள் இப்போராட்டத்தை நடத்தினா். பாமக மாநில துணை பொதுச் செயலா் பொன்கங்காதரன் தலைமை தாங்கினாா்.
கருங்குழி பேரூா் செயலா் மோ.சிவராமன், கட்சி நிா்வாகிகள் சதீஷ், சபரி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் பேரூராட்சி அலுவலகத்தின் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் பேரூராட்சி செயல் அலுவலா் மா.கேசவனிடம் துணை பொதுச் செயலா் பொன்.கங்காதரன் வழங்கினாா். இதேபோல அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி, இடைக்கழிநாடு பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பாமக நிா்வாகிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
