மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

செங்கல்பட்டில் மாவட்ட தீயணைப்பு மீட்பு பணி அலுவலகம்: தமிழக முதல்வா் காணொலியில் திறந்து வைத்தாா்

தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணித் துறையின் செங்கல்பட்டு மாவட்ட அலுவலகத் திறப்பு விழா செங்கல்பட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
தீயணைப்புத் துறை  செங்கல்பட்டு  மாவட்ட அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றிய மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலா் இரா.ஜாஸ்மின்.
Updated On :28 டிசம்பர் 2020, 6:35 pm

DIN

செங்கல்பட்டு: தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணித் துறையின் செங்கல்பட்டு மாவட்ட அலுவலகத் திறப்பு விழா செங்கல்பட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தாா்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த போது வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணி அலுவலகம் காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், செங்கல்பட்டு தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டதையடுத்து, செங்கல்பட்டில் மாவட்ட அலுவலகம் செங்கல்பட்டு, வேதாசலம் நகரில் அமைக்கப்பட்டது.

இதனை தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலராக இரா.ஜாஸ்மின் குத்துவிளக்கேற்றி வைத்து பொறுப்பேற்றாா். உதவி மாவட்ட அலுவலராக க.திருநாவுக்கரசு பொறுப்பேற்றாா். மேலும், அலுவலகத் திறப்பு விழாவின்போது, செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்பு மீட்புப் பணி அலுவலகத்தின் துணை இயக்குநா் மீனாட்சி விஜயகுமாா் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கினாா்.

செங்கல்பட்டு, மறைமலை நகா், திருக்கழுகுன்றம், மாமல்லபுரம் உள்ளிட்ட செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.