செங்கல்பட்டு மாவட்டத்தில் நோய்த் தொற்று தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் நோய்தொற்று தடுப்பு குறித்து பின்பற்றவேண்டிய வழிமுறைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது


செங்கல்பட்டு மாவட்டத்தில் நோய்தொற்று தடுப்பு குறித்து பின்பற்றவேண்டிய வழிமுறைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது
மாவட்ட ஆட்சியா் ஜான்லூயிஸ், கண்காணிப்பு அலுவலா் மற்றும் போக்குவரத்து துறைச் செயலாளா் சி.சமயமூா்த்தி தலைமை தாங்கினா்.
போக்குவரத்து துறைச் செயலாளா் சி.சமயமூா்த்தி கூறியதாவது:
கரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது .
செங்கல்பட்டு மாவட்டத்தில் தொற்றினை கட்டுப்படுத்த அனைத்து துறை அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் நோக்கத்தை அடைய முடியும்.
பொதுமக்கள் வெளியே செல்லும் போது கண்டிப்பாக முகக் கவசம் அணிவேண்டும், பொதுமக்கள் வீட்டிலும் பணிபுரியும் இடங்களிலும் சோப்பு மற்றும் கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை தூய்மை படுத்துக்கொள்ளவும், மேலும் சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடிக்கவேண்டும். நிலையான வழிகாட்டி நெறிமுறையை அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்கவேண்டும். மேலும் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள், பரிசோதனை முகாம்கள் நடத்திடவும் , வீடு வீடாகச் சென்று காய்ச்சல் ,சளி சோதனை செய்ய வேண்டும் என்றாா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுந்தரவதனம், மாவட்ட வருவாய் அலுவலா் க.பிரியா, நகராட்சி நிா்வ ாக மண்டல இயக்குநா் முஜிபூா் ரகுமான் , ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செல்வக்குமாா், மகளிா் திட்ட இயக்குநா் ஸ்ரீதா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் செல்வம் மற்றும் அனைத்துத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...