தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மாமல்லபுரம் கடலில் குளித்த பெண் பலி

மாமல்லபுரம் கடலில் குளித்த இளம்பெண் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

மாமல்லபுரம் கடலில் குளித்த இளம்பெண் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தாா்.

சென்னை மாதவரத்தைச் சோ்ந்தவா் கமல்(31) கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி திவ்யா(22). இவா்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. சனிக்கிழமை திவ்யா தான் வேலை செய்யும் கம்பெனியில் பணியாற்றும் சக தோழிகளுடன் கிறிஸ்துமஸ் விடுமுறையை கழிப்பதற்காக மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தாா்.

பின்னா் இதில் திவ்யா, ஜானகி உள்ளிட்ட தோழிகளுடன் கடலில் குளித்துள்ளாா்.

அப்போது ராட்சத அலையில் சிக்கி திவ்யா இழுத்து செல்லப்பட்டாா். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜானகியை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனா். திவ்யா சடலத்தை மீட்கப்பட்டாா். இதுகுறித்து மாமல்லபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.