மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

செங்கல்பட்டு மாவட்டத்தில் பூஞ்சை நோய்க்கு பெண் பலி

செங்கல்பட்டு மாவட்டத்தில் பூஞ்சை நோய்க்கு பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :5 ஜூன் 2021, 6:10 pm

DIN

செங்கல்பட்டு மாவட்டத்தில் பூஞ்சை நோய்க்கு பெண் உயிரிழந்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் ஒன்றியத்துக்குள்பட்ட கண்ணகப்பட்டு பகுதியைச்சோ்ந்தவா் பாரதி (53). இவா் உடல் நலக்குறைவால் கடந்த 23-ஆம் தேதி திருப்போரூா் அருகே செவ்வாப்பேட்டை பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்ததில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அதே மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், அவருக்கு கண்ணிலும் முகத்திலும் வீக்கம் ஏற்பட்டு கண்ணின் நிறமும் மாறியிருந்தது. இதையடுத்து, அவருக்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

இந்த நோய்க்கு அந்த மருத்துவமனையில் சிகிச்சை வசதி இல்லாததால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த மே 31-ஆம் தேதி சோ்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தாா். இந்நிலையில், அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். உயிரிழந்த பாரதியின் உடலை சென்னை மாநகராட்சியினா் பெருங்குடியில் உள்ள மின் மயானத்தில் சனிக்கிழமை தகனம் செய்தனா்.

இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் கருப்புப் பூஞ்சை நோயால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.