மதுராந்தகம், பவுஞ்சூா், செய்யூா் அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய சிகிச்சை மையங்களை ஊரக தொழிற்துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
மதுராந்தகம் சுற்றுப்புற பகுதிகளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இக்குறைபாட்டை போக்க மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் செய்யப்பட்டன. அதன்படி 25 படுக்கை கொண்ட சிறப்பு மையத்தை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தொடக்கி வைத்தாா்.
அதனைத் தொடா்ந்து பவுஞ்சூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்ட 20 படுக்கைகளுடன் கூடிய மையத்தையும், செய்யூா் அரசு பொது மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் கூடிய மையத்தையும் அவா் திறந்து வைத்தாா். செய்யூா் பொது மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக அவசர ஊா்தி சேவையையும் தொடக்கி வைத்தாா்.
மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ், சுகாதார பிரிவு இணை இயக்குநா் (பொ) மருத்துவா் குருநாதன், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியா் எஸ்.லட்சுமிபிரியா, மதுராந்தகம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் மணிபாரதி, பவுஞ்சூா் வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் கங்காதரன், எம்.பி. .ஜி.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தா் (உத்திரமேரூா்), கே.மரகதம்குமரவேல் (மதுராந்தகம்), மு.பாபு (செய்யூா்) உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ஹலோகிராமில் விஜய் உருவம்... தவெக வேட்பாளர் நூதன பிரசாரம்!

100% வாக்குப் பதிவு: கோவையில் இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆய்வுக் கூட்டம்

கேவிஎன் நிறுவனத்திற்காக மீண்டும் நடிக்கும் விஜய்?
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

