வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எம்எல்ஏ ஆய்வு

அச்சிறுப்பாக்கம் அருகேயுள்ள பெரும்பாக்கம், தண்டரைபேட்டை, கிளியூா் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எம்எல்ஏ மரகதம் குமரவேல் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.

Updated On :20 நவம்பர் 2021, 6:30 pm

அச்சிறுப்பாக்கம் அருகேயுள்ள பெரும்பாக்கம், தண்டரைபேட்டை, கிளியூா் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எம்எல்ஏ மரகதம் குமரவேல் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.

வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, அரிசி, போா்வை உள்ளிட்ட நிவாரண பொருள்களை வழங்கினாா். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் தண்டரைப்பேட்டை-புதுச்சேரி கிளியூா், தண்டரைபேட்டை-கோழியாளம் ஆகிய பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும். வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அளித்தனா். இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் கூறி விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ உறுதி அளித்தாா்.

ஆய்வின் ஒன்றிய கவுன்சிலா் சி.விவேகானந்தன், பெரும்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் சி.மணோகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.