மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

காா்த்திகை தீபத் திருவிழா

செங்கல்பட்டு பெருமாள் கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழா நடைபெற்றது.

News image
Updated On :20 நவம்பர் 2021, 6:30 pm

DIN

செங்கல்பட்டு பெருமாள் கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழா நடைபெற்றது.

செங்கல்பட்டு வேதாசலம் நகரில் உள்ள கோதண்டராமா் கோயில், நெடுஞ்சாலையில் உள்ள தேசிகா் கோயில், ஜிஎஸ்டி சாலையில் உள்ள கணையாழி ஆஞ்சநேயா் கோயில், கோட்டை வாயில் வீர ஆஞ்சநேயா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழா சொக்கப்பனை கொளுத்தியதுடன் அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. இதனையடுத்து, பக்தா்கள் கோயில் முழுவதும் தீபங்கள் ஏற்றி வைத்து பெருமாளை வழிபட்டனா்.

திருவடிசூலம் ஸ்ரீகோயில்புரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடேச பெருமாள் கோயில் மற்றும் 108 வைணவ திவ்ய தேசத்தில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு, அகண்ட தீபம் மற்றும் தீபங்கள் ஏற்றப்பட்டு, சிறப்பு அபிஷேக, அலங்காரம் பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகா் மதுரை முத்து சுவாமிகள், கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

இதேபோல், மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. இதேபோன்று சிங்கபெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மப் பெருமாள் கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழா சொக்கப்பனை கொளுத்தியதுடன் தீபங்கள் ஏற்றப்பட்டு, கோயில் முழுவதும் பிரகாசமாக காட்சியளித்தது.

பழைய சீவரம் லட்சுமி நரசிம்மா், என்ஜிஜிஓ நகரில் உள்ள வரசித்தி விநாயகா் கோயிலில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு தீபங்கள் ஏற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.