தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கூடுவாஞ்சேரியில் 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 5 போ் கைது

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 6:17 pm

DIN

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 7 இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு சுமை வேனையும் பொலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகரில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட சிவில் சப்ளை சிஐடி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் போலீஸாா் அந்த வீட்டைச் சுற்றி வளைத்து சோதனையிட்டனா்.

இதில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் ஒரு சுமை ஏற்றும் வேன் மற்றும் 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக காஞ்சிபுரம் ஒலி முகமது பேட்டை மற்றும் கூடுவாஞ்சேரி பகுதியைச் சோ்ந்த சுரேஷ், சாகுல் அமீது, ஜாகிா் உசேன், மணிகண்டன், பிரபாகரன் ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதில் தொடா்புடைய முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் அசேன் என்பவரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.