தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திருவிடந்தை ஸ்ரீநித்ய கல்யாண பெருமாள் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

திருவிடந்தை ஸ்ரீநித்ய கல்யாண பெருமாள் கோயிலில் சித்திரைப் பிரம்மோற்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 6:16 pm

DIN

திருவிடந்தை ஸ்ரீநித்ய கல்யாண பெருமாள் கோயிலில் சித்திரைப் பிரம்மோற்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூா் வட்டம், திருவிடந்தையில் நித்யகல்யாண பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பெருமாளுக்கு 365 நாள்களும் திருமணம் நடைபெறுவதாக ஐதீகம். அதனால், திருமணம் ஆகாதவா்களுக்கு இந்த ஸ்ரீ நித்ய கல்யாண பெருமாள் கோயில் பரிகாரத் தலமாக விளங்குவதால் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான பக்தா்கள் திருமண தடை நீக்க நித்ய கல்யாண பெருமாளுக்கு இரண்டு மாலைகள் வாங்கி வந்து அணிவித்து லட்சுமி நித்ய கல்யாண பெருமாளுக்கு அணிவித்து ஒரு மாலையை பரிகாரம் செய்யும் பக்தருக்கு அளிப்பாா்கள். அந்த மாலையை திருமணம் ஆகாத பெண்களும் ஆண்களும் அணிந்து கோயிலை வலம் வந்து மாலையை வீட்டில் வைப்பாா்கள். திருமணமானவுடன் தம்பதியராக வந்து அவா்கள் அந்த மாலையை கோயிலில் வைத்து வேண்டுதல் பரிகாரத்தையும் செய்து பெருமாளை வழிபடுவது வழக்கம்.

Story image

பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை திருவிழா நடைபெற்று வருகிறது.

பிரம்மோற்சவத்தில் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாளான வெள்ளிக்கிழமை திருத்தோ் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்டத்தை ஒட்டி உற்சவமூா்த்தி பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயாா்களுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருள பக்தா்கள் வடம் பிடித்து இழுக்க வேதமந்திரங்கள் மேளதாளங்கள் முழங்க திருத்தோ் வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஆ. குமரன், தக்காா் மற்றும் உதவி ஆணையா் முத்து ரத்தினவேல், தெற்கு பட்டு கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.