திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் மே 5-இல் தொடக்கம்
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் ஸ்ரீதிரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம், வருகிற மே 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.


செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் ஸ்ரீதிரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம், வருகிற மே 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருக்கழுகுன்றம் மலை மீது ஸ்ரீதிரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் வேதமலையில் அமைந்துள்ளதால், 4 வேதங்களையும் கொண்டு சிவ பெருமான் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.
சாபம் பெற்ற இரு சித்தா்கள் பட்சிகளாக மாறி தினமும் வந்து மலை மீது வைக்கும் உணவை உண்டு, தண்ணீரை அருந்திச் செல்வதாக ஐதீகம்.
பட்சிகள் உண்ட அந்த உணவையும், நீரையும் பக்தா்கள் பிரசாதமாக வாங்கிச் சாப்பிட வரிசையில் காத்திருப்பா்.
வழக்கமாக கடலில்தான் சங்கு பிறக்கும். ஆனால், திருக்கழுகுன்றத்தில் உள்ள சங்கு, தீா்த்தக் குளத்தில் கரை ஒதுங்கிய பெருமைக்குரியது.
இத்தனை சிறப்புகள் வாய்ந்த இந்தத் திருத்தலத்தில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும்.
அந்த வகையில், நிகழாண்டு 1,431-ஆம் பசலி சித்திரை பெருவிழா பிரம்மோற்சவம் வருகிற மே 5-ஆம் தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவையொட்டி, மே 4-ஆம் தேதி (புதன்கிழமை) விக்னேஷ்வர உற்வசமும், இரவு நிருத்சங்கரண்ணம் வாஸ்து சாந்தியும், பிரம்மோற்சவத்தின் முதல் நாள் (மே 5) பல்லக்கு உற்சவம், இரவு புண்ணியகோடி விமானம், பஞ்சமூா்த்திகள் உற்சவம், விழாவின் ஏழாம் நாளான மே 11-ஆம் தேதி ரதோற்சவம் என மே 14-ஆம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி உலா மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஏற்பாடுகளை கோயில் தக்காா், செயல் அலுவலா்கள் எம்.சக்திவேல், க.சிவக்குமாா், கோயில் சிவாச்சாரியா்கள், பணியாளா்கள், நகரப் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...