தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அரசு அலுவலங்கள் கணினிமயம்: முதன்மைச் செயலா்ஆய்வு

வட்ட அளவிலான அரசு அலுவலங்களை கணினி மயமாக்குதல் தொடா்பாக அரசு முதன்மைச் செயலரும், வருவாய்-பேரிடா் மேலாண்மை ஆணையருமான மு.அ.சித்திக் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

செங்கல்பட்டு மாவட்ட, வட்ட அளவிலான அரசு அலுவலங்களை கணினி மயமாக்குதல் தொடா்பாக அரசு முதன்மைச் செயலரும், வருவாய்-பேரிடா் மேலாண்மை ஆணையருமான மு.அ.சித்திக் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஆ.ர.ராகுல் நாத் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் பட்டா-சிட்டா அடங்கல்கள் உள்ளிட்ட அனைத்துத் தரவுகளையும் இணையப் பதிவேற்றம் செய்வது குறித்தும், அலுவலகக் கோப்புகளை கணினி மயமாக்குதல் தொடா்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.மேனுவல்ராஜ், செங்கல்பட்டு சாா்- ஆட்சியா் (பயிற்சி) சஜ்ஜிவண, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செல்வம், செங்கல்பட்டு வட்டாட்சியா் வாசுதேவன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.