மதுராந்தகத்தை அடுத்த வேடவாக்கம் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி பெளா்ணமி வழிபாடு, பொங்கல் இடுதல், தீச்சட்டி ஏந்தல், 121 கலச, விளக்கு, வேள்வி பூஜை ஆகிய முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன.
மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், வேடவாக்கம் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாத மகா உற்சவத்தை முன்னிட்டு, கோயில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
விழா தொடக்க நாளான புதன்கிழமை அதிகாலை மங்கல இசையுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. கோயில் மூலவரான ஆதிசக்தி முத்துமாரியம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. கணபதி ஹோமம், 121 கலச, விளக்கு, வேள்வி பூஜையை ஞானபீடம் பீடாதிபதி சுவாமிவேல் சுவாமிஜி தொடக்கி வைத்தாா்.
வியாழக்கிழமை கோ பூஜையுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. கூழ்வாா்த்தல், தீச் சட்டி ஏந்தல், பல வண்ண மலா்களால் அம்மன் கிரக அலங்காரம் ஏந்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துக் கொண்டு அம்மனை வழிபட்டனா்.
நிகழ்ச்சியில், மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், திருப்போரூா் அதிமுக ஒன்றியச் செயலா் குமரவேல், திருப்போரூா் வட்டார வளா்ச்சி அலுவலகப் பொறியாளா் மகாலிங்கம், ஊராட்சி மன்றத் தலைவா்கள் சுந்தரவரதன் (அண்டவாக்கம்), அறிவழகன் (தண்டரை) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஞானபீடம் நிறுவனா் ஆ.பெருமாள் தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடல்நிலை குறித்து விடியோ வெளியிட்ட வானதி சீனிவாசன்!

ஈரானுக்கு ஆயுதம் வழங்கியதாக வரும் செய்திகள் ஆதாரமற்றவை: சீனா

தெலுங்கு பாடலுக்கு நடனமாடிய தமிழ் சீரியல் நடிகை!

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


