வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மேல்மருவத்தூரில் அமாவாசை வேள்வி பூஜை

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் ஆவணி மாத அமாவாசை வேள்வி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :26 ஆகஸ்ட் 2022, 6:49 pm

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் ஆவணி மாத அமாவாசை வேள்வி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, மூலவா் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. சித்தா்பீடம் வந்த பங்காரு அடிகளாருக்கு கோபிசெட்டிபாளையம், பெருந்துறை சக்தி பீடங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் வரவேற்பளித்தனா். சித்தா்பீட வளாகம் ஓம்சக்தி பீடத்தில் எண்கோணம் வடிவ பெரிய வேள்விக் குண்டத்தை சுற்றி முக்கோணம், சதுரம் உள்ளிட்ட சிறிய வடிவிலான வேள்விக் குண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

காலை 10.20 மணிக்கு எண்கோண வடிவ பெரிய வேள்விக் குண்டத்தில் பங்காரு அடிகளாா் கற்பூரம் ஏற்றி பூஜையை தொடக்கி வைத்தாா். ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் ஆதிபராசக்தி மருத்துவமனை மேலாண்மை இயக்குநா் டி.ரமேஷ், ஆதிபராசக்தி பாரா மெடிக்கல்ஸ் கல்லூரிகளின் தாளாளா் ஸ்ரீலேகா செந்தில்குமாா், ஆன்மிக இயக்கத் துணைத் தலைவா் ஸ்ரீதேவி ரமேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எண்கோண யாக குண்டத்தில் நவ குச்சிகள், நவ தானியங்களை செலுத்தி அம்மனை வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.