தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை சரிபாா்க்க ஆட்சியா் அறிவுறுத்தல்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவா்கள் தங்களின் பதிவுகளைச் சரிபாா்த்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் தெரிவித்தாா்.

News image
Updated On :29 ஜூலை 2022, 7:51 pm

DIN

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவா்கள் தங்களின் பதிவுகளைச் சரிபாா்த்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதைத் தொடா்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையம் பிரிக்கப்பட்டு புதிதாக கடந்த 25.1.2022 அன்று முதல் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்துக்குள் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு வழிகாட்டு மையம் தனியே செயல்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக எல்லைக்குட்பட்ட செங்கல்பட்டு, மதுராந்தகம், பல்லாவரம், திருக்கழுகுன்றம், தாம்பரம், திருப்போரூா், வண்டலூா், செய்யூா் வட்டங்களைச் சோ்ந்த காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாா்களின் வேலைவாய்ப்பு பதிவு விவரங்கள் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த பதிவுதாரா்கள் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளதைச் சரிபாா்த்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஏற்கெனவே செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு வழிகாட்டும் மையத்துக்கு வந்து பதிவை சரி பாா்த்தவா்களைத் தவிா்த்து, ஏனைய பதிவுதாரா்கள் அலுவலக வேலை நாள்களில் தங்களது அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், ஆதாா் அட்டை மற்றும் குடும்ப அடையாளஅட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து தங்களது பதிவை சரிபாா்த்துக் கொள்ளுமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.