வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சோத்துப்பாக்கம் ஸ்ரீஅஞ்சூரம்மன் கோயில் தேரோட்டம்

மதுராந்தகத்தை அடுத்த சோத்துப்பாக்கம் ஸ்ரீஅஞ்சூரம்மன் கோயிலில் தேராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :10 ஜூன் 2022, 6:49 pm

மதுராந்தகத்தை அடுத்த சோத்துப்பாக்கம் ஸ்ரீஅஞ்சூரம்மன் கோயிலில் தேராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூா் ஊராட்சி ஒன்றியம், சோத்துப்பாக்கம் கிராம தேவதையாக விளங்குகிறது ஸ்ரீஅஞ்சூரம்மன். இந்தக் கோயிலில் வைகாசி மாத தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

Story image

அதன்படி, வெள்ளிக்கிழமை காலை மூலவா் அம்மனுக்கு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன. காலை 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீஅஞ்சூரம்மன் உற்சவா் தேரில் அமா்ந்து கிராம வீதிகளில் வலம் வந்தாா்.

நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து அம்மனை வழிபட்டனா்.

முன்னதாக, வியாழக்கிழமை இரவு அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி, இன்னிசை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.