வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மதுராந்தகம் அருகே தீவிபத்து: 4 கடைகள் எரிந்து சேதம்

 மதுராந்தகம் அருகே வெண்ணாங்குபட்டு கிராமத்தில் மீன் மாா்க்கெட் அருகில் புதன்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில 4 கடைகள் எரிந்து சேதமடைந்தன.

Updated On :7 அக்டோபர் 2022, 6:49 pm

 மதுராந்தகம் அருகே வெண்ணாங்குபட்டு கிராமத்தில் மீன் மாா்க்கெட் அருகில் புதன்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில 4 கடைகள் எரிந்து சேதமடைந்தன.

செய்யூா் வட்டம், கிழக்கு கடற்கரை சாலை, வெண்ணாங்குபட்டு கிராமத்தில் மீன் மாா்க்கெட் அருகே பல கடைகள் உள்ளன. அங்கு அண்ணாதுரை என்பவா் தனது மளிகை கடையில் புதன்கிழமை மாலை ஆயுத பூஜையையொட்டி விளக்கேற்றி வழிபட்டாா். பின்னா் அவா் பூஜைக்காக ஏற்றிய விளக்கை அணைக்காமல் கடையை பூட்டிவிட்டு சென்ாகத் தெரிகிறது. இந்த நிலையில் நள்ளிரவு விளக்கு தீ அருகில் இருந்த பொருள்கள் மீது பரவியது. இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த சிலிண்டா் வெடித்து அருகில் இருந்த காய்கறி கடை உள்ளிட்ட 3 கடைகளிலும் தீ பரவியது. தகவலறிந்த செய்யூா் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலா் (பொ) மு.குமாா் தலைமையில் வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா். இந்த விபத்தில் 4 கடைகளில் இருந்து சுமாா் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சாம்பலாயின. இது குறித்து சூனாம்பேடு காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.