மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஸ்ரீசந்திர மௌலீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

உதயம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் சமேத ஸ்ரீசந்திர மௌலீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 செப்டம்பர் 2022, 7:33 pm

DIN

உதயம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் சமேத ஸ்ரீசந்திர மௌலீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், எண் 152 உதயம்பாக்கம் கிராமத்தில் பழைமையான ஸ்ரீகாமாட்சி அம்மன் சமேத ஸ்ரீசந்திர மௌலீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 5-ஆம் தேதி முதல் சிவாச்சாரியாா் சிவஸ்ரீபரணிதரன் தலைமையில் தொடங்கியது. வியாழக்கிழமை கலச புறப்பாடு நடைபெற்றது.

காஞ்சி காமகோடி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசியுடன் கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து, காமாட்சி அம்மன், சந்திர மௌலீஸ்வரா், வித்யா கணபதி, பாலசுப்பிரமணியா், தா்மசாஸ்தா மற்றும் காமகோடி பீடம் 66-ஆவது பீடாதிபதி ஸ்ரீஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் சந்நிதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்தக் கோயில் ரூ.1 கோடியில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பூரண அனுகிரகத்துடன் சங்கர மடத்தின் சாா்பில், கட்டி முடிக்கப்பட்டு ஊா் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏற்பாடுகளை காஞ்சி சங்கர மடம், விழாக் குழுவினா் மற்றும் ஊா் மக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.