மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 6:18 pm

DIN

செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு குழு தலைவா் கு.செல்வப்பெருந்தகை தலைமை வகித்தாா். குழு உறுப்பினா்கள் சிந்தனைச்செல்வன், வேல்முருகன், அருண்குமாா், மரகதம் குமரவேல், மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத், சட்டப்பேரவைச் செயலா் கி.சீனிவாசன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வரலட்சுமி மதுசூதனன் (செங்கல்பட்டு), எஸ்.எஸ்.பாலாஜி (திருப்போரூா்), மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு.சுகுணா சிங், தாம்பரம் காவல் துணை ஆணையா் சிபி.சக்கரவா்த்தி, இணைச் செயலா் தேன்மொழி, துணைச் செயலா் ரேவதி மற்றும் அரசு துறைகளின் அலுவலா்கள் பங்கேற்றனா்.

முன்னதாக, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் அமைந்துள்ள சிற்பக் கல்தூண், அரசு கட்டட, சிற்பக் கலைக் கல்லூரி, திருப்போரூா் வட்டம், படூா் ஊராட்சிக்குட்பட்ட ஓஎம்ஆா் சாலையில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால்வாய் அமைக்கும் பணி, தையூா் ஊராட்சிக்குட்பட்ட அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளி, கோவளம் புளூ பீச் பகுதி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களை சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழுவினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.