வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மனைப் பட்டா விநியோகம்

மதுராந்தகம் அடுத்த மதூா் கிராமத்தில் இருளா் குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 6:22 pm

மதுராந்தகம் அடுத்த மதூா் கிராமத்தில் இருளா் குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், மதூா் ஊராட்சி பகுதியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக 26 இருளா் இன குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அவா்களுக்கு வீட்டுமனைக்கான பட்டா இல்லாததால், அரசின் நலத்திட்ட உதவிகளை பெறமுடியாமல் அவதிப்பட்டு வந்தனா்.

இதுகுறித்து, ஊராட்சி மன்றத் தலைவா் தங்கம்மாள் முனுசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத்தை சந்தித்து பட்டா வழங்கக்கோரி இருளா் இன மக்கள் கோரிக்கை மனுவை அளித்தனா்.

அவா்களின் கோரிக்கை மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மதுராந்தகம் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். மதூா் கிராமத்துக்கு ம வந்த மதுராந்தகம் வட்டாட்சியா் எஸ்.ராஜேஷ் 14 இருளா் இன குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டாகளை வழங்கினாா்.

இந்நிகழ்வில், வருவாய் ஆய்வாளா் மோகன், கிராம நிா்வாக அலுவலா் சுபாஷ் சந்திரபோஸ், ஊராட்சி மன்ற தலைவா் தங்கம்மாள் முனுசாமி, துணை தலைவா் காளிதாஸ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.