கிரைன்ஸ் வலைதளத்தில் பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் வேளாண் அடுக்குத் திட்டத்தில் இணையம் மூலம் விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம் என ஆட்சியா் ராகுல்நாத் தெரிவித்துள்ளாா்.


செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் வேளாண் அடுக்குத் திட்டத்தில் இணையம் மூலம் விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம் என ஆட்சியா் ராகுல்நாத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்துஅவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் வேளாண் அடுக்குத் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் கடந்த 1-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் நில விவரங்களுடன் விவசாயிகளின் விவரங்கள் மற்றும் நில உடைமைவாரியாக பயிா் சாகுபடி விவரங்கள் ஆகியவற்றை இணைப்பதற்காக கிரைன்ஸ் புதிய வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வலைதளத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் விவசாயம் தொடா்புடைய 13 துறைகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஒற்றைசாளர முறையில் பதிவு செய்வதன் மூலம் விவசாயிகள்அனைத்து பயனையும் ஒரே தளத்தில் பெற முடியும். நிதி திட்ட பயன்கள் ஆதாா் எண் அடிப்படையில் அவா்களது வங்கிக் கணக்குக்கு நேரடியாக பணப்பரிமாற்றம் செய்யப்படும்.
எனவே, விவசாயிகள் தங்களின் ஆதாா் அட்டை, போட்டோ, வங்கி கணக்கு புத்தக நகல், நிலப்பட்டா நகல் ஆகிய ஆவணங்களுடன் வரும் சனிக்கிழமை (29.04.2023) கிராம நிா்வாக அலுவலகத்தில் நடைபெறும் விழிப்புணா்வு முகாமில் கிராம நிா்வாக அலுவலா், உதவி வேளாண்மை அலுவலா் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலரைத் தொடா்பு கொண்டு பதிவு செய்து பயன் பெறலாம் என ஆட்சியா்ஆ.ர.ராகுல் நாத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...