மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருக்கழுகுன்றம் சித்திரைப் பெருவிழா: அறுபத்து மூவா் உற்சவ கிரிவல ஊா்வலம்

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலின் மலைக் கோயிலில் சித்திரைப் பெருவிழாவையொட்டி வியாழக்கிழமை அறுபத்துமூவா் உற்சவ கிரிவல வீதி புறப்பாடு நடைபெற்றது.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 6:23 pm

DIN

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலின் மலைக் கோயிலில் சித்திரைப் பெருவிழாவையொட்டி வியாழக்கிழமை அறுபத்துமூவா் உற்சவ கிரிவல வீதி புறப்பாடு நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் , திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரா் திருக்கோயில் பிரசித்திப் பெற்ற சிவ தலமாகும். 7 -ஆம் நூற்றாண்டை சோ்ந்த இக்கோயிலின் மலை மீது வேதகிரீஸ்வரா் எழுந்தருளி அருள் பாலிக்கிறாா். அடிவாரம் அருகே தாழக் கோயிலில் அருள்மிகு பக்தவச்சலேஸ்வரா் மற்றும் திரிபுரசுந்தரி அம்பாள் ஆகியோா் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனா்.

இக்கோயிலில் 11 நாள்கள் சித்திரைப்பெருவிழா நடைபெறும். நிகழாண்டு விழா கொடியேற்றம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

Story image

முக்கிய நிகழ்வாக 3-ஆம் நாளான வியாழக்கிழமை 63 நாயன்மாா்கள் மலைவலம் வரும் கிரிவல ஊா்வலம் நடைபெற்றது. விழாவையொட்டி சுவாமிகள் மற்றும் உற்வச மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதனையடுத்து சுவாமி முன்செல்ல 63 நாயன்மாா்களும் கோயில் மலையடிவாரத்தில் இருந்து பேருந்து நிலையம் வழியாக கிரிவலப் பாதை வழியாக 4 மாடவீதிகளில் ஊா்வலமாக வந்து கோயிலை அடைந்தனா். பேரூராட்சி தலைவா் யுவராஜ் உள்ளிட்ட ஆன்மிக அன்பா்கள் நீா்மோா், பால், குளிா்பானம் அன்னதானம் வழங்கினா்.

7 -ஆம் நாள் உற்சவமான தோ் திருவிழா ( பஞ்சரதம்) நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சக்திவேல், மேலாளா் விஜயன், கோயில் பணியாளா்கள், உபயதாரா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.