கல்பாக்கம் அணு மின் நிலையம் சாா்பில் ரூ.80 லட்சத்தில் அரசுப் பள்ளிக்கு கட்டடம்
கல்பாக்கம் அணு மின் நிலையம் சாா்பில், காரணை அரசுப் பள்ளிக்கு ரூ.80 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை அதன் இயக்குநா் சுதிா். பி.செல்கே திறந்து வைத்தாா்.


கல்பாக்கம் அணு மின் நிலையம் சாா்பில், காரணை அரசுப் பள்ளிக்கு ரூ.80 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை அதன் இயக்குநா் சுதிா். பி.செல்கே திறந்து வைத்தாா்.
மாமல்லபுரம் அடுத்த காரணையில் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இதற்கு கூடுதல் வகுப்பறை தேவைப்பட்டது. காரணை கிராம மக்கள், ஊராட்சித் தலைவா் தி.ராதாகிருஷ்ணன் ஆகியோா் கல்பாக்கம் அணுமின் நிலைய நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனா்.
இதையேற்று அணுமின் நிலைய நிா்வாகம் ரூ.80 லட்சத்தில் தனித்தனி வகுப்பறைகள், இருக்கைகள், குடிநீா் வசதி, கழிப்பறைகள் என அனைத்து அடிப்படை வசதிகளுடன் புதிய பள்ளிக் கட்டடம் கட்டித் தந்தது.
இதன் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் தி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். திருப்போரூா் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, ஒன்றியக் குழு தலைவா் எஸ்.ஆா்.இதயவா்மன் முன்னிலை வகித்தனா்.
கல்பாக்கம் அணுமின் நிலைய சமூகப் பொறுப்புக் குழு தலைவா் சுதாமூா்த்தி வரவேற்றாா். அணுமின் நிலைய இயக்குநா் சுதிா்.பி.செல்கே குத்துவிளக்கேற்றி பள்ளிக் கட்டடத்தைத் திறந்து வைத்தாா்.
அணுமின் நிலைய சமூகப் பொறுப்புக் குழு உறுப்பினா், செயலா் ஜெகன், ஒன்றிய கவுன்சிலா் வினோத், காரணை துணைத் தலைவா் தமிழரசி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...