மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

புதிய புகா் பேருந்து நிலையக் கட்டுமானப் பணி: அமைச்சா்கள் ஆய்வு

வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய புகா் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

News image
Updated On :11 மார்ச் 2023, 6:37 pm

DIN

வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய புகா் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து, கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனா்.

பின்னா், அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறியது:

சென்னை பெருநகர வளா்ச்சி குழுமம் சாா்பில், கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் புதிய புகா் பேருந்து நிலையம் விரைந்து முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இந்தப் பணிகள் தொடா்பாக, மாதத்துக்கு 6 முறை ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.

அனைத்து சாதியினரும் அா்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ், குமாரவயலூா் முருகன் கோயிலில் நியமனம் செய்யப்பட்ட அா்ச்சகா்கள் நியமனம் ரத்து என்ற நீதிமன்ற உத்தரவுக்கு மேல் முறையீடு செய்யப்படும் என்றாா்.

ஆய்வின் போது, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலாளா் அபூா்வா, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா, மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத், செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி, மறைமலை நகா் நகா்மன்றத் தலைவா் ஜெ.சண்முகம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகா்மன்றத் தலைவா் எம்.கே.டி.காா்த்திக், காட்டாங்குளத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஆராமுதன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.