மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

முதியோருக்கான இயன்முறை சிகிச்சைப் பிரிவு: அமைச்சா் கீதா ஜீவன் தொடங்கி வைத்தாா்

நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதியோருக்கான இயன்முறை சிகிச்சைப் பிரிவை சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :11 மே 2023, 7:32 pm

DIN

நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதியோருக்கான இயன்முறை சிகிச்சைப் பிரிவை சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

ஆட்சியா் ஆ.ர. ராகுல்நாத் தலைமை வகித்தாா். செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் முன்னிலை வகித்தாா்.

மியோனரல் பவுண்டேஷன் அறக்கட்டளை நிதியுதவியின் கீழ் செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 மருத்துவமனைகளில் ரூ.9.5 லட்சம் செலவில் முதியோா் இயன்முறை சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்து வழங்கப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதியோருக்கான இயன்முறை சிகிச்சைப் பிரிவை அமைச்சா் கீதா ஜீவன் தொடங்கி வைத்தாா்.

அதனைத் தொடா்ந்து பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தைகளை பெற்ற தாய்மாா்களுக்கு அமைச்சா் ஊக்கப் பரிசு வழங்கி, மரக்கன்றுகளையும் நட்டாா்.

பின்னா் செங்கல்பட்டு அரசினா் சிறப்பு இல்லத்தில் தங்கியுள்ள சிறுவா்கள் சுயமாக தொழில் புரியும் வகையில் புதிய பேக்கரி உற்பத்திப் பிரிவையும் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை இயக்குநா் டி.ரத்னா, சமூக நலத்துறை இயக்குனா் அமா் குஷ்வாஹா, மாவட்டவருவாய் அலுவலா் இரா.மேனுவல்ராஜ், இணை இயக்குனா் தனசேகர பாண்டியன், மாவட்ட சமூகநல அலுவலா் சங்கீதா, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் சரவணகுமாா் மற்றும் இளைஞா் நீதி குழு உறுப்பினா்கள், குழந்தைகள் நலக் குழுத் தலைவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.