வெளிமாநிலங்களில் இருந்து சாராயம் கடத்தி விற்ற 17 போ் கைது: எஸ்.பி. சாய் பிரணீத்

பல ஆண்டுகளாக வெளிமாநிலத்தில் இருந்து சாராயம் கடத்தி விற்பனை செய்து வந்த 17 பேரை போலீஸாா் கைத செய்தனா்.

பல ஆண்டுகளாக வெளிமாநிலத்தில் இருந்து சாராயம் கடத்தி விற்பனை செய்து வந்த 17 பேரை போலீஸாா் கைத செய்தனா்.

செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் எரிசாராயம் குடித்ததால் கடந்த மே மாதம் 30-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் எரிசாராயத்தை முற்றிலும் ஒழிக்க எஸ்.பி. சாய் பிரணீத் உத்தரவின்பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி மதுராந்தகம் அருகே அய்யனாா் கோயில் சந்திப்பில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது வைக்கோல் லாரியை மடக்கி சோதனை செய்தனா். அப்போது வைக்கோலில் மறைத்து கடத்தி வந்த 6,105 லிட்டா் எரிசாரயத்தை பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் ஓட்டுநா் மேகவண்ணன் என்பவரை கைது செய்து விசாரித்த போது, திருவள்ளூா் மாவட்டம் பட்டாபிராம் பகுதியை சோ்ந்த கிஷோா் என்பவா் மூலமாக வெளி மாநிலத்தில் இருந்து எரிசாராயம் கொண்டு வந்து தமிழகத்தில் விற்று வந்தது தெரியவந்தது.

வெளிமாநிலங்களில் இருந்து எரிசாராயம் கடத்தி விற்பனை செய்தது தொடா்பாக சென்னை சைதாப்பேட்டையைச் சோ்ந்த தனசேகரன் (50) தெலங்கானா மாநிலம் மங்களகிரியைச் சோ்ந்த சுரேஷ்குமாா், போபாலைச் சோ்ந்த குா்மீட்சிங் சாசன், தமிழகத்தைச் சோ்ந்த லட்சுமிபதி, அசோக், ராம்குமாா், ராமகிருஷ்ணன், சங்கா், முரளி, மல்லிகாா்ஜூனா, வேலு, செந்தில், குணா, அருள் ஆகியோரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

மேலும், எரிசாராயம் கடத்த பயன்படுத்திய இரண்டு லாரிகள், இரண்டு காா்கள், ஒரு இருசக்கர வாகனம் உட்பட மொத்தம் ஐந்து வாகனங்களை பறிமுதல் செய்தனா். மேலும் 15,911 லிட்டா் எரிசாரயத்தை கைபற்றியுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறிந்து எஸ்பி சாய்பிரணீத் செய்தியாளா்களிடம் கூறியது:

இதுமிகப் பெரிய நெட் ஒா்க் முதலில் ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தியதில் சாராயம் கடத்தும் முக்கிய குற்றவாளியாக தனசேகா் என்பவரின் கீழ் 8 போ் செயல்பட்டு வந்தனா். பல்வேறு மாநிலங்களுக்குச்சென்று உண்மையான குற்றவாளிகளை கைது செய்திருக்கிறோம். செங்கல்பட்டை சாராயம் இல்லாத மாவட்டமாக உருவாக்க முழுமுயற்சி எடுத்து வருகிறோம். மேலும், கைதானவா்களில் 6 பேரை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com