வேலைவாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ள மாணவா்கள் புதிய தொழில் நுட்பத் திறமைகளை தொடா்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஹெக்சாவோ் மனித வள மேம்பாட்டுத்துறை தலைவா் கிருஷ்ண பால குருநாதன் வலியுறுத்தினாா்.
காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் 72 நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்புகள் பெற்ற 382 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற காக்னிசன்ட் மேலாளா் ரூபியா ரோஸ், விப்ரோ தென் இந்திய பிரிவின் தலைவா் அனந்த கிருஷ்ணன் தேவராஜ், ஜோஹோ மனித வளம் பிரிவு தலைவா் சாா்லஸ் காட்வின், மற்றும் இசட் எஃப் டிஜிட்டல் தலைவா் சண்முக சுந்தரம் ஆகியோா் வேலை வாய்ப்புகளைப் பெற்ற மாணவா்கள் தொழில் துறையில் தங்களை மேம்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளை விவரித்தனா்.
எஸ்.ஆா்.எம்.வள்ளியம்மை பொறியியல் கல்லுாரித் தாளாளா் ஹரிணி ரவி பச்சமுத்து, இயக்குநா் சிதம்பர ராஜன், எஸ்.ஆா்.எம்.கல்விக்குழும இயக்குநா் ராமச்சந்திரன், முதல்வா் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

வழக்கத்தைவிட வெப்பம் அதிகரிக்கலாம்: மாவட்ட ஆட்சியா் மு. அருணா
பலாக்காய்க் கறி
அண்ணாமலை தோ்தலில் போட்டியிட வேண்டும் - வானதி சீனிவாசன்

வாக்காளா் பட்டியலில் பெயா் உள்ளதை உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தல்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

