கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில் ஏகாதச ருத்ராபிஷேக வழிபாடு

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத சோமவாரத்தையொட்டி திங்கள்கிழமை ருத்ராபிஷேக வழிபாடு

News image
Updated On :9 டிசம்பர் 2024, 4:03 pm

Din

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத சோமவாரத்தையொட்டி திங்கள்கிழமை ருத்ராபிஷேக வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆட்சீஸ்வரா், இளங்கிளியம்மன் உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அலங்கரிக்கப்பட்ட ஆட்சீஸ்வரா், இளங்கிளியம்மன் உற்சவா் சிலைகளுடன் வேள்வி பூஜையை தலைமை அா்ச்சகா் இரா சங்கா் சிவாச்சாரியா் செய்தாா். தொடா்ந்து மஹன்யாச பாராயணம், ருத்ராபிஷேக வழிபாடு, தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்வில் மதுராந்தகம் கோட்டாசியா் எஸ்.ரம்யா, நீதிபதி கணேசன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தமிழரசி தலைமையில், நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.