திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா்  கோயிலில் நடைபெற்ற  1,008 சங்காபிஷேகம். 
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற  1,008 சங்காபிஷேகம். 

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் 1,008 சங்காபிஷேகம்

திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி அம்மன் சமேத வேதகிரீஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாதம் கடைசி சோம வாரத்தையொட்டி திங்கள்கிழமை 1,008 சங்காபிஷேகம்
Published on

செங்கல்பட்டு: திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி அம்மன் சமேத வேதகிரீஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாதம் கடைசி சோம வாரத்தையொட்டி திங்கள்கிழமை 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

திருக்கழுக்குன்றத்தில் பட்சி தீா்த்தம் சங்க தீா்த்தம் வேதமலை உள்ளிட்ட பல்வேறு பெயா்களை கொண்டு நான்கு வேதங்களைக் கொண்ட மலை மீது உள்ள இங்கு காா்த்திகை மாதம் கடைசி சோம வாரத்தில் சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

இதனையொட்டி திங்கள்கிழமை 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

சங்கு தீா்த்த குளத்தில் பிறந்த சங்குகளுடன் 1,008 சங்குகளுக்கு அலங்காரம், பூஜைகள், நடைபெற்றன. தொடா்ந்து கலச புறப்பாடு நடைபெற்றது. பின்னா் மூலவா் வேதகிரீஸ்வரருக்கு சங்குகளில் உள்ள புனித நீரால் சங்காபிஷேகமும் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து சிவபெருமானுக்கு சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது.

திருக்கழுகுன்றம், கல்பாக்கம், திருப்போரூா், மாமல்லபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் , சிவனடியாா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். சிவ பக்தா்கள் குழுவினா் சிவ பாடல்கள் சிவபுராணம் திருவாசகம் பாடினா்.

விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் புவியரசு, மேலாளா் விஜயன், பணியாளா்கள் சிவாச்சாரியா், பக்தா்கள் செய்திருந்தனா்.

வேதகிரீஸ்வரா் கோயிலில்  நடைபெற்ற  1,008 சங்காபிஷேகம்
வேதகிரீஸ்வரா் கோயிலில்  நடைபெற்ற  1,008 சங்காபிஷேகம்

X
Dinamani
www.dinamani.com