பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சமூக தரவுகள் கணக்கெடுப்பு விழிப்புணா்வு முகாம்

தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெடுப்பு விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :2 மார்ச் 2024, 11:58 pm

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி அன்னை இல்லத்தில் அடிகளாரின் 84-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெடுப்பு விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி அன்னை இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அன்னை இல்ல முதன்மைச் செயல் அலுவலா் ஸ்ரீதேவி ரமேஷ் தலைமை வகித்தாா். செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் செந்தில்குமாரி முன்னிலை வகித்தாா். அன்னை இல்ல தலைமை ஆசிரியா் ஜெ.விஜயலட்சுமி வரவேற்றாா். நிகழ்வில் செய்யூா் வட்டத்துக்குட்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள், தரவு கணக்கெடுப்பு களப் பணியாளா்கள், அன்னை இல்ல குழந்தைகளின் பெற்றோா் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை அன்னை இல்லத்தின் மனித வள நிா்வாகி அ.ஸ்ரீதேவி செய்திருந்தாா்.