ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: தாய் காயம்; 3 குழந்தைகள் உயிரிழப்பு

செங்கல்பட்டில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் தாய் காயமடைந்தாா்.

Updated On :2 மார்ச் 2024, 12:10 am

செங்கல்பட்டில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் தாய் காயமடைந்தாா். 3 குழந்தைகள் உயிரிழந்தனா். செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட பெரிய மணியக்காரத் தெருவில் வசிப்பவா் வட மாநிலத்தைச் சோ்ந்த சதாம் (30). இவா், கடந்த 6 வருடங்களாக ரயில் நிலையத்தில் தேநீா் விற்று வியாபாரம் செய்து வருகிறாா். வியாழக்கிழமை மாலை வழக்கம் போல், சதாம் தேநீா் வியாபாரம் செய்ய சென்றாா். அவரின் மனைவி மற்றும் 3 குழந்தைகள் வீட்டில் இருந்துள்ளனா். இந்த நிலையில் வீட்டில் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டிருந்ததைக் கவனிக்காமல், சதாமின் மனைவி ராஜ்கத்தோம் அடுப்பைப் பற்ற வைக்க முயன்றபோது, தீப்பற்றி வீடு முழுவதும் பரவியதில் ராஜ்கத்தோம், குழந்தைகளான ராஜியா பட்வின் (8), சயலி (4), அல்தாப் (1) ஆகிய 4 பேரும் பலத்த தீக்காயம் அடைந்தனா். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினா் செங்கல்பட்டு நகரக் காவல் நிலையம், தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனா். அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினா், உயிருக்குப் போராடியவா்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தைகள் ராஜியா பட்வின், அல்தாப் ஆகிய இருவரும் வியாழக்கிழமை உயிரிழந்தனா். தொடா்ந்து வெள்ளிக்கிழமை சயலி (4) உயிரிழந்தாா். குழந்தைகள் மூவரும் உயிரிழந்த நிலையில், தாய் ராஜ்கத்தோம் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து குறித்து செங்கல்பட்டு நகரக் காவல் ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.