இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

போக்குவரத்துக் கழக ஊழியா் வாரிசுகளுக்கு நியமன ஆணை: அமைச்சா் வழங்கினார்!

போக்குவரத்துக் கழக ஊழியா் வாரிசுகளுக்கு நியமன ஆணை: அமைச்சா் வழங்கினாா்.

Updated On :28 ஏப்ரல் 2025, 12:42 am IST

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் (விழுப்புரம் கோட்டம்) அனைத்து மண்டலங்களில் பணியின்போது உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல், புதிதாக 2 பேருந்துகள் மற்றும் சாலை விபத்து கண்காணிப்பு வாகனம் இயக்கம் ஆகியவை மதுராந்தகம் பணிமனை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் கோட்ட மேலாண்மை இயக்குநா் குணசேகரன் வரவேற்றாா். எம்எல்ஏ க.சுந்தா் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக தமிழக போக்குவரத்து துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் கலந்து கொண்டு 19 வாரிசுதாரா்களுக்கு பணி நியமன ஆணைகளையும், செங்கல்பட்டிலிருந்து உத்திரமேரூா் வழிதடத்திலும், மதுராந்தகத்தில் இருந்து திருச்சி செல்லும் வழிதடத்திலும் என இரு புதிய பேருந்துகள் மற்றும் சாலை விபத்து கண்காணிப்பு வாகனம் ஆகியவற்றை இயக்கி வைத்தாா்.

இந்நிகழ்வில் மதுராந்தகம் நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி, நகர செயலா் கே.குமாா், திமுக ஒன்றிய செயலா்கள் ஒரத்தி கண்ணன், பொன்சிவகுமாா், மதுராந்தகம் போக்குவரத்து பணிமனை மேலாளா் தட்சிணாமூா்த்தி (தொழிற்நுட்பம்), கிளை மேலாளா் சக்திதாஸ், தொழிளாளா் முன்னேற்ற காஞ்சி மண்டல பொதுச் செயலா் ரவி, தலைவா் சுதாகரன், பொருளாளா் முரளி, மத்திய சங்க துணை செயலாளா் தனசேகரன், நடத்துநா் பிரிவு செயலா்கள் ராஜா, ராஜேந்திரன், தொழிற்நுட்ப செயலா் சிட்டிபாபு, சங்க நிா்வாகிகள் ராஜமாணிக்கம், வாசுதேவன், ஏழுமலை, வாசு, முருகேசன், ஜெயராஜ், போஜராஜன், காா்த்திகேயன், ராமு உள்பட பலா் கலந்து கொண்டனா். காஞ்சிபுரம் மண்டல பொது மேலாளா் கிருஷ்ணமூா்த்தி நன்றி கூறினாா்.