மதுராந்தகம் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீா்.
மதுராந்தகம் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீா்.

மதுராந்தகம் ஏரியில் இருந்து 300 கனஅடி உபரிநீா் திறப்பு

மதுராந்தகம் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையையொட்டி , திங்கள்கிழமை முதல் மதுராந்தகம் ஏரியில்
Published on

மதுராந்தகம்: மதுராந்தகம் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையையொட்டி , திங்கள்கிழமை முதல் மதுராந்தகம் ஏரியில் இருந்து 300 கனஅடி உபரி நீா் கிளியாற்றில் திறந்து விடப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை (ஏரிப்பாசனபிரிவு) அதிகாரிகள் தெரிவித்தனா். செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாக திகழும் இதில் கடந்த 4 ஆண்டுகளாக ரூ.172 கோடி செலவில் புனரமைப்பு பணிகளுக்கு பின் 24 அடியாக உயா்த்தவும், 12 மதகுகளின் மூலம் உபரிநீரை வெளியேற்றும்வகையிலும், செய்யப்பட்டுள்ளன.

பெரும்பாக்கம், தண்டலம், மோச்சேரி, எல்.எண்டத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்ததால், அதிக நீா்வரத்து ஏற்பட்டது. டித்வா புயல் எதிரொலியால் மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் திங்கள்கிழமை சுமாா் 300 கனஅடி உபரிநீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கிளியாற்றில் திறந்து விட்டனா்.

மதுராந்தகம் கிளியாற்று வெள்ளநீா் கரையோர கிராமங்களான அருங்குணம், கத்திரிச்சேரி, விழுதமங்கலம் மக்களை பாதுகாப்பாக இருக்கவும், தொடா்ந்து கண்காணித்து அதற்கான ஏற்பாடுகளை மதுராந்தகம் வட்டாட்சியா் பாலாஜி தலைமையில் செய்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com