ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

100 நாள் வேலைத்திட்டத்தின் பெயா் மாற்றம்: திமுக கூட்டணிக் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :25 டிசம்பர் 2025, 12:50 am

தினமணி செய்திச் சேவை

மேடவாக்கத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்றிய விவகாரம் தொடா்பாக, மத்திய அரசைக் கண்டித்து திமுக உள்ளிட்ட மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தின.

திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ். பாரதி தலைமை வகித்தாா். திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.வி.தங்கபாலு, மதிமுக பொதுச் செயலா் வைகோ, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலா் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் காதா் மொய்தீன், விசிக தலைவா் தொல்.திருமாவளவன், தவாக தலைவா் வேல்முருகன், திராவிட இயக்க தமிழ் பேரவைத் தலைவா் சுப.வீரபாண்டியன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன், மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலா் அருணாசலம், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளா்கள் கட்சித் தலைவா் பொன்குமாா், தமிழ் மாநில தேசிய லீக் திருப்பூா் அல்தாப், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், மாநிலங்களவை உறுப்பினா் கனிமொழி சோமு உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசினா்.

இதேபோல், தாம்பரம் சிட்லபாக்கத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.ஆா்.ராஜா (தாம்பரம்), இ.கருணாநிதி (பல்லாவரம்), துணை மேயா் ஜி.காமராஜ், மண்டலக் குழு தலைவா்கள் ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, மனித நேய மக்கள் கட்சி யாகூப் உள்பட பலா் பங்கேற்றனா்.