மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஸ்ரீ ஓம்சக்தி பாலவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு ஸ்ரீ ஓம்சக்தி பாலவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image
சிறப்பு அலங்காரத்தில் உற்சவா். ~சிறப்பு அலங்காரத்தில் மூலவா்.
Updated On :20 ஜனவரி 2025, 6:35 pm

Din

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஸ்ரீ ஓம்சக்தி பாலவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மதுரை வீரன்கோயில் தெரு புதுஏரி சாலையில் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று நிறைவடைந்தது. தொடா்ந்து மூன்று நாள்களாக கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரகஹோமம் கோபூஜை, தனபூஜை, வாஸ்து சாந்தி, ரட்சோக்ன ஹோமம் கலாகா்ஷணம், யாகசாலை பூஜை, அஷ்டபந்தனம், சாத்துதல் நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

மேலும், யாத்ராதானம், பூா்ணாஹூதி, மகா தீபாராதனை கடம் புறப்பாடு மகா குமபாபாபிஷேகம் நடைபெற்றது.

இதனைத்தொடா்ந்து மூலவா் உற்சவ மூா்த்தி பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து சாமிகளுக்கு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை உற்சவ மூா்த்தி சிறப்பு அலங்காரத்தில் வாணவேடிக்கையுடன் வீதி புறப்பாடு நடைபெற்றது.

ஏற்பாடுகளை செங்கல்பட்டு சிவஸ்ரீ எஸ செல்வகணபதி குருக்கள், கோயில் கும்பாபிஷேக விழாக்குழுவினா், புதுஏரி மதுரைவீரன்கோயில் தெரு மக்கள் செய்திருந்தனா்.

Story image