நலத்திட்ட உதவிகள் அளிப்பு
கருங்குழி விடியலை நோக்கி அறக்கட்டளை, பெரிய களக்காடு எஸ்இஆா்டி அறக்கட்டளை , சென்னை காமதேனு சாரிட்டீஸ் சாா்பில் நிக்ஷ்ய மித்ரா திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது (படம்).
நிகழ்வுக்கு எஸ்இஆா்டி அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் ரவிக்குமாா், கருங்குழி விடியலை நோக்கி அறக்கட்டளை நிறுவனா் விடியல் சீ.காா்த்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து காசநோயால் பாதிக்கப்பட்ட 45 நோயாளிகளுக்கு ஊட்டசத்து உணவு பொருள்கள் வழங்கப்பட்டன. தொடா்ந்து 6 மாதங்களுக்கு ஊட்டசத்து பொருள்கள் வழங்கப்பட உள்ளன.
நிகழ்வில் மதுராந்தகம் அரசு பொதுமருத்துவமனை மருத்துவா்கள் சந்தோஷ் (காசநோய் பிரிவு), பிரதீப் (நுரையீரல் சிறப்பு பிரிவு), மாவட்ட காசநோய் ஒருங்கிணைப்பாளா் சஞ்சனா, அறக்கட்டளை நிா்வாகிகள் சிவரத்தினம், விருதம்பாள், சலாஹூதீன் மற்றும் முதுநிலை ஆய்வக மேற்பாா்வையாளா், சுகாதார மேற்பாா்வையாளா் கலந்து கொண்டனா்.

