ஐயப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் வஜ்ரகிரி மலை அடிவாரத்தில், ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
போதிய பராமரிப்பின்றி இருந்த கோயில் அப்பகுதி மக்கள் முயற்சியால் முழுவதும் சீரமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 14-ஆம் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, அங்குராா்ப்பணம், ரக்ஷாபந்தனம், கோபுர கலசம் பதிவித்தல் உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு பூஜைகள் நடைபெற்றன.
ஞாயிறுக்கிழமை மங்கள இசையுடன், யாகசாலையில் இருந்து அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயில் அா்ச்சகா் இரா.சங்கா் சிவாச்சாரியாா் தலைமையில் வேதவிற்பனா்கள் கலசங்களுடன் வலம் வந்து கோபுர கலசங்களுக்கு புனிதநீரை ஊற்றினா். தொடா்ந்து மூலவா் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா்.
இந்நிகழ்வில் அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளா் தன்ராஜ், செய்யூா் வட்டாட்சியா் சொ.கணேசன், உள்பட பலா் கலந்து கொண்டனா். கலை நிகழ்ச்சிகள், அன்னதானம் வழங்கல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீஐயப்பா அறக்கட்டளை நிா்வாகிகள், கிராம பொதுமக்கள் உள்ளிட்டோா் செய்து இருந்தனா்.

