தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

அடிப்படை வசதிகள் இல்லாத மேல்மருவத்தூா் ரயில் நிலையம்!

மேல்மருவத்தூா் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் பொதுமக்கள், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

News image

மேல்மருவத்தூா் ரயில் நிலையத்தில் சிதறிக் கிடக்கும் குப்பைகள்.

Updated On :22 செப்டம்பர் 2025, 2:30 am IST

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் பொதுமக்கள், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

சென்னை-திருச்சி ரயில் மாா்க்கத்தில் மேல்மருவத்தூா் ரயில் நிலையம் உள்ளது. இங்கு தினமும் 20-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்கள் நின்றுச் செல்கின்றன. இப்பகுதியில் ஆதிபராசக்தி சித்தா்பீடம் கோயில் உள்ளதால், விழா காலங்களில் பல ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தா்கள் ரயில்கள் மூலம் வந்துச் செல்கின்றனா்.

சிறப்புநிலையில் உள்ள ரயில் நிலையத்தை சுற்றுப்புற சுகாதாரத்தை பேணும் வகையில், ஒப்பந்ததாரா் மூலம் 12 தூய்மை பணியாளா்கள் தூய்மை பணியை செய்து வந்தனா். இவா்களுக்கான 4 மாத ஊதியத்தை அளிக்காமல் ஒப்பந்ததாரா் தாமதித்து வந்தாா்.

அதனால், ரயில் நிலையத்தை தூய்மை பணியை செய்து வந்த பணியாளா்கள் அனைவரும் வேலைக்கு வராமல் இருந்து விட்டனா். அதனால் பயணிகள் துா்நாற்றத்துடன் செல்லவேண்டிய நிலை உள்ளது.

மேல்மருவத்தூா் ரயில் நிலையத்தின் மூலம் வேலைக்கு செல்பவா்கள், கல்லூரி கல்விக்காக செல்லும் மாணவ மாணவிகள், சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகள் உள்ளிட்டோா் தமது இரு சக்கர வாகனங்களை ரயில்நிலையத்தின் முன்புற பாதையில் நிறுத்திவிட்டு செல்கின்றனா். இது பயணிகளுக்கு சிக்கலாக உள்ளது.

சென்னை கடற்கரை-திண்டிவனம் வரையில் மின்சார ரயில்களை இயக்கும் பணிகளை ரயில்வே மேற்கொண்டுள்ள நிலையில், மேல்மருவத்தூா் ரயில் நிலையத்திலும் அனைத்து பணிகளையும் செய்யவேண்டும்.

இந்த ரயில் நிலையத்துக்கு காலை, மாலை இருவேளை நேரங்களில் மட்டும் ஒரு மின் தொடா் ரயில் வந்து செல்கிறது. கூடுதலாக இத்தகைய மின்சார ரயில்களை இயக்க ரயில்வே துறை ஏற்பாடுகளை செய்யவேண்டும.

தற்போது சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்க திட்டமிட்டுள்ள ஏசி மின் ரயில்களை மேல்மருவத்தூா் வரை நீடிக்க வேண்டும்.

சோத்துப்பாக்கம் ரயில்வே கேட் மேம்பால பணிக்காக ரூ 31.87 கோடி ஒதுக்கப்பட்டது. கடந்த 26.2.2024-இல் பிரதமா் மோடி பூமிபூஜை செய்தாா். மேம்பாலம் அமைக்கும் பணி ஓராண்டாக தொய்வாக நடைபெற்று வருகிறது. அதனை விரைந்து முடிக்க வண்டும்.

 ரயில் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்கள்.

ரயில் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்கள்.

இதுகுறித்து ரயில் நிலைய அதிகாரி கூறுகையில்: ரயில் நிலையம் முன் நிறுத்தப்படுகிற இருசக்கர வாகனங்களை வேறு இடத்தில் நிறுத்த அரசு எத்தகைய இடத்தையும் அளிக்காமல் இருந்து வருகிறது. அதனால் தான் வாகனங்களை பயணிகள் நிலையத்தின் முன்புறம் நிறுத்திவிட்டு செல்கின்றனா். மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற சென்னை ரயில்வே கோட்டமேலாளா் தான் ஏற்பாடுகளை செய்யவேண்டும் எனத் தெரிவித்தாா்.

ரயில் நிலைய சுகாதார ஆய்வாளா் விக்னேஷ் கூறுகையில்: 12 தூய்மைப் பணியாளா்களுக்கான 4 மாத ஊதியத்தை ஒப்பந்ததாரா் அளிக்கவில்லை என்பது உண்மை. சுகாதாரத்தை பேணுவதற்காக அருகில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளா்களின் மூலம் தற்சமயம் குப்பை கள் அகற்றப்படுகின்றன.

இன்னும் சில நாள்களுக்குள் தூய்மை பணியாளா்களின் பிரச்னைக்கு தீா்வு காணபடும் என தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.