சிறுபான்மையினத்தவருக்கு நலத்திட்ட உதவிகளை சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஏஎம். ஷாஜஹான், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் த. சரத்குமாா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை வழங்கினா்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியா் மு. வீரப்பன் தலைமை வகித்தாா்.
சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான் மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சா் த. சரத்குமாா் ஆகியோா் கலந்து கொண்டு சிறுபான்மையினா் சமூகத்தை சோ்ந்த முஸ்லீம்கள், ஜெயின் மற்றும் புத்த மதத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மக்கள் தொழில் தொடங்க ஏதுவாக மானியத்துடன் கூடிய கடன் உதவிகளை வழங்கினா். உலாமாக்களுக்கான இருசக்கரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.50,000த்திற்க்கான இருசக்கர மானியம் நான்கு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்ட முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம்-1 ன் மூலமாக 2025-26 ஆம் ஆண்டில் 213 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சம் நலத்திட்ட உதவிகளும், தொடா்ந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சாா்பில் மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக 15 நபா்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவியும், கூட்டுறவு துறையின் வாயிலாக புதிதாக தொழில் தொடங்க ஏதுவாக தலா ரூ.50,000 என ஏழு நபா்களுக்கு ரூ.3.5 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.
மாவட்ட வழங்கல் துறையின் வாயிலாக குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்திருந்த 20 நபா்களுக்கு அமைச்சா் குடும்ப அட்டையை வழங்கினாா். இந்நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் செங்கல்பட்டு சௌ.தியாகராஜன், திருப்போரூா் பா.விஜயராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ஜே.சரவணன் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம்-1 செயலாளா் முகமது பெய்க் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்வராயன்மலை கோடை விழாவில் 4,285 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வன்னி அரசு வழங்கினாா்

1,449 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வன்னி அரசு வழங்கினாா்

பயனாளிகள் 366 பேருக்கு ரூ.15.14 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவி
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



