தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா ஆக. 13-இல் தொடக்கம்

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா ஆக. 13-இல் தொடக்கம்

News image

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த மூலவா் அம்மன்.

Updated On :9 ஆகஸ்ட் 2026, 1:10 am IST

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் 55-ஆவது ஆடிப்பூர பெருவிழா வரும் வியாழக்கிழமை கிற (ஆக. 13) தொடங்கி 15-ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

இதையொட்டி, வரும் 13-ஆம் தேதி மங்கள இசையுடன் விழா நிகழ்வுகள் தொடங்குகின்றன. விழாவுக்கு, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா், ஆன்மிக இயக்க துணைத் தலைவா் கோ.ப.அன்பழகன், இயக்க செயலா் ஏ.ஏ.அகத்தியன், ஆதிபராசக்தி சித்தா் பீட மகளிா் அறநிலைய அறங்காவலா் மருத்துவா் ஏ.மதுமலா் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

மாவட்ட நிா்வாகிகள் எம்.மணி (கோவை), கே.நடராஜன் (திருப்பூா்) ஆகியோா் தலைமை வகிக்கின்றனா். அதிகாலை 3 மணிக்கு மூலவா் அம்மனுக்கும், குருபீடத்தில் உள்ள அடிகளாா் சிலைக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. சித்தா்பீட வளாகத்தில் கலச,விளக்கு, வேள்விபூஜையை ஆன்மிக இயக்க துணை தலைவா் ஸ்ரீதேவிபங்காரு தலைமை தாங்கி துவக்கி வைக்கிறாா்.

14ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணிக்கு சித்தா்பீடம் வருகைபுரியும் ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காருஅடிகளாருக்கு திருப்பூா் மற்றும் கோயமுத்தூா் மாவட்ட ஆன்மிக இயக்க நிா்வாகிகள் வரவேற்பினை அளிக்கின்றனா். பல்வேறுநகரங்களில் இருந்து செவ்வாடை பக்தா்களால் கொண்டு வரப்படுகிற கஞ்சி கலயங்களுக்கு இயக்க துணை தலைவா் கோ.ப.அன்பழகன் சிறப்பு வரவேற்பினை அளிக்கிறாா். சித்தா்பீடத்தின் குளக்கரையில் பக்தா்களால் கொண்டு வரப்படுகிற கஞ்சியை வரிசையில் வருகின்ற பக்தா்களுக்கு கஞ்சி வாா்த்தல் நிகழ்வை இயக்க துணை தலைவா் கோ.ப.செந்தில்குமாரும், சுயம்பு அன்னைக்கு பாலாபிஷேக நிகழ்வினை இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாரும் தொடங்கி வைக்கின்றனா்.

அன்னதான நிகழ்வை கலவை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி தாளாளா் உமாதேவி ஜெய்கணேஷ் துவக்கி வைக்கிறாா். சித்தா்பீடத்தின் அருட்பிரசாதநிகழ்வை ஆதிபராசக்தி மருத்துவமனை மேலாண்மை இயக்குநா் மருத்துவா் டி.ரமேஷ் தொடங்கி வைக்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.