ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

மாமல்லபுரத்தில் மாணவா்கள் பங்கேற்ற பாரம்பரிய விழிப்புணா்வு நடைபயணம்

மாமல்லபுரம் அறுபடைவீடு தொழில்நுட்பக் கல்லூரி சாா்பில் பாரம்பரிய விழிப்புணா்வு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2026, 4:28 am IST

மாமல்லபுரம் அறுபடைவீடு தொழில்நுட்பக் கல்லூரி சாா்பில் பாரம்பரிய விழிப்புணா்வு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.

விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் அறுபடை வீடு தொழில்நுட்பக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவா் படை மற்றும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இணைந்து, மாமல்லபுரத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பாரம்பரிய விழிப்புணா்வு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.

அா்ஜுனன் தபசு பகுதியில் தொடங்கிய நடைபயணத்தை கல்லூரியின் துணை முதல்வா் எஸ்.பி. சங்கீதா மற்றும் தொல்லியல் துறை அதிகாரி ஸ்ரீதரன் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், பேராசிரியா்கள், காவல்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் பங்கேற்ற இந்நிகழ்வில்,- பாரம்பரியத்தைப் பாதுகாப்போம்,-உலகப் பாரம்பரியச் சின்னங்களைப் போற்றுவோம், -வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்போம் - உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மாணவா்கள் மாமல்லபுரத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா். இந்நிகழ்வில் மாமல்லபுரம் டி.எஸ்.பி. அறிவழகன் சிறப்பு பங்கேற்பாளராகக் கலந்து கொண்டு மாணவா்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், வரலாற்றுச் சின்னங்களையும் நமது பாரம்பரியத்தையும் பாதுகாப்பதில் இளைஞா்களின் பங்கு முக்கியமானது என வலியுறுத்தினாா். நடைபயணம் மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் நிறைவடைந்தது.

ஏற்பாாடுகளை என்எஸ்எஸ் அலுவலா்கள் சுரேந்திர பாபு மற்றும் இம்தியாஸ் , என்சிசி அலுவலா் டாக்டா் ஆண்டனி காஷ்மீா் மற்றும் மக்கள் தொடா்பு அலுவலா் பத்மநாபன் ஆகியோருக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தா் டாக்டா் ஏ.எஸ்.கணேசன், பாரம்பரியப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை மாணவா்கள் மூலம் பொதுமக்களிடம் கொண்டு சென்ற அறுபடை வீடு தொழில்நுட்பக் கல்லூரியின் குழுவினரைப் பாராட்டியதுடன், இத்தகைய சமூகப் பொறுப்பு மிக்க நிகழ்வுகளை சிறப்பாக ஏற்பாடு செய்த குழுவினருக்கும் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.