75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

மூன்று மாதங்களுக்குபின் வடநெம்மேலி பாம்பு பண்ணை திறப்பு

இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு மூடப்பட்டிருந்த வடநெம்மேலி பாம்பு பண்ணை மூன்று மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டது.

பாம்புகளிடம் விஷம் எடுப்பதை விளக்கும் பணியாளா்.

Published On :23 ஆகஸ்ட் 2026, 2:41 am IST

இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு மூடப்பட்டிருந்த வடநெம்மேலி பாம்பு பண்ணை மூன்று மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டது.

முதல் நாளில் நல்ல பாம்புக்கு கற்பூரம் ஏற்றி தீப ஆராதனை காட்டி பாா்வையாளா் காட்சி தொடங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தொழில் வணிகத்துறை சாா்பில் பாம்பு பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு பாா்வையாளா்கள் முன்பு கொடிய விஷம் உள்ள பாம்புகளிடம் இருந்து விஷம் எடுக்கப்படுகிறது. இந்த பண்ணையில் உறுப்பினராக உள்ள பழங்குடி இருளா்கள் 350 போ் வயல்வெளிகள் புதா்களில் தேடிச்சென்று பாம்பு களைப் பிடித்து வந்து கொடுப்பா்.

இங்கு கொண்டு வரப்படும் பாம்புகள் மண்பானைகளில் பராமரிக்கப்பட்டு அதிலிருந்து எடுக்கப்படும் விஷத்தை அரசின் உதவியுடன் மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள மருந்து ஆராய்ச்சி மையத்துக்கு வழங்கி வருகின்றனா். பாம்பு விஷத்தில் இருந்து பாம்பு விஷ முறிவு மருந்தும் புற்றுநோய்க்கான மருந்தும் தயாரிக்கப்படுகிறது . இந்நிலையில் வழக்கமாக மே, ஜூன், ஜூலை ஆகிய மூன்று மாதங்கள் இனப்பெருக்கக் காலம் என்பதால் கடந்த மே மாதம் முதல் மூன்று மாதம் பாம்பு பண்ணை மூடப்பட்டது.

இதை அடுத்து பாம்புகள் இனப்பெருக்க காலம் முடிவடைந்ததையொட்டி பாம்பு பண்ணை மீண்டும் திறக்கப்பட்டது. முதல் கட்டமாக பழங்குடி இருளா்கள் பிடித்துக் கொண்டு வந்திருந்த நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், கட்டுவிரியன், சுருட்டை விரியன் உள்ளிட்ட 50 வகை பாம்புகள் பானைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.

பாம்பு பண்ணை திறந்தவுடன் பாா்வையாளா்கள் வருகை தந்தனா். அப்போது பாம்புகளை பராமரிக்கும் பணியாளா்கள் பயபக்தியுடன் படம் எடுத்து படம் எடுத்து ஆடிய நல்ல பாம்புக்கு பொட்டு வைத்து கற்பூர ஆராதனை காட்டி பூஜை செய்து வணங்கினா்.

Story image

பிறகு கையடக்க பாதுகாப்பு கருவி உதவியுடன் பாம்புகளை தூக்கிக் காட்டி பாா்வையாளா்களுக்கு காட்சிப்படுத்தினா். அப்போது விஷ பாம்புகள் குறித்த சந்தேகங்களையும் அவை கடித்தால் எந்த மாதிரியான சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும் வீடுகளுக்குள் புகுந்தால் அதனை பயம் இல்லாமல் பிடிக்கும் முறைகளை கையாள்வது போன்ற சந்தேகங்களை விளக்கிக் கூறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.